மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி நான்குவழிச் சாலை மேம்பாலம் பகுதியில், சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையுடன் கார் வந்துக் கொண்டிருந்தது.


அப்போது, மேம்பாலம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் சென்று எதிரே, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதில், சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் அப்பளம் போல நொறுங்கி, காரில் பயணம் செய்த சென்னை வாடிபாக்கத்தைச் சேர்ந்த ஶ்ரீராம் உட்பட 2 ஆண்கள், மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரி, ரஞ்சனா ஆகிய 2 பெண்கள், பிரணிகா (3) வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


மேலும், இதே காரில் பயணம் செய்த ஒரு ஆண், மற்றும் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த காரில் பயணம் செய்த ஒரு ஆண் உட்பட 2 பலத்த காயத்துடன், மேலூர் தீயணைப்புத்துறை, காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினர் உதவியுடன் மீட்கப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777
