வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய ஜனநாயக கட்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியின் சார்பில் மாவட்ட தலைவர் பாபாஜி தலைமையில் கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க கோரியும், வளத்தூர் ஊராட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இலவச வீட்டு மனை வழங்கி இடத்தை அளந்து கொடுக்காமல் காலம் கடத்தி வரும் அரசு கவனம் செலுத்தும் வகையிலும், கூட நகரம் ஊராட்சியில் வெற்றி நகர் பகுதியில் 11234 டாஸ்மார்க் கடை இடமாற்ற வேண்டும் என்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் பாபாஜி தலைமையில் வரவேற்புரை மாவட்ட செயலாளர் ஜேக்கப் மேலும் கூட்டத்தில் கண்டன உரை நிகழ்த்த கே .வி. குப்பம் தொகுதி மாவட்ட தலைவர் டாக்டர் கணேசன் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மகளிர் அணி தலைவி எஸ் குமுதா மாவட்ட துணைச் செயலாளர் ஆர் பிரசாத் மாவட்ட இளைஞரணி செயலாளர் ப. ராஜ்குமார் ஒன்றிய தலைவர் பாபு( எ) மணிவண்ணன் மகளிர் அணி செயலாளர் பி கவிதா கன்னன் மற்றும் மகளிரணியைச் சேர்ந்த ஐம்பது க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed