சாயல்குடி வளமீட்பு பூங்காவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு .

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், சாயல்குடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள வளமீட்பு பூங்காவினை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    
ஆய்வின் போது, வளமீட்பு பூங்காவிற்கு வரும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு முறையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையை பார்வையிட்டு, மேலும், மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் பணிகள், அவற்றை தரமான முறையில் பதப்படுத்தி விற்பனைக்காக பாக்கெட்டுகளில் தயாரித்து வைத்துள்ள நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். தயாரிக்கப்படும் இயற்கை உரங்களின் தரத்தை தொடர்ந்து பராமரித்து, விவசாயிகள் , பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
   
அதனைத் தொடர்ந்து, வளமீட்பு பூங்காவில் தேங்கியுள்ள பழைய கழிவுகளை நவீன இயந்திரங்களின் உதவியுடன் விரைவாக அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை முழுமையாக மறுசுழற்சிக்கு உட்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட வேண்டுமென அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
அத்துடன், வளமீட்பு பூங்காவின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும், வளாகம் எப்போதும் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், கழிவுகள் தேங்காமல் உரிய முறையில் மேலாண்மை செய்யப்பட வேண்டும், பொதுமக்களிடையே கழிவு மேலாண்மை , தூய்மை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களைமாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
 

ஆய்வின் போது , சாயல்குடி பேரூராட்சி பொறுப்பு துப்புரவு மேற்பார்வையாளர் அருண்குமார் , ஒப்பந்த துப்புரவு மேற்பார்வையாளர் முத்துமாரி , பேரூராட்சி அலுவலர்கள், செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி. சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed