காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் விடுதியில் 11- ம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஓரிக்கை பாரதிதாசன் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவியின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் , மக்கள் மன்றம் அமைப்பு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டு பள்ளி உரிமையாளரை கைது செய்ய ஆர்ப்பாட்டம் செய்ததால் பரப்பரப்பு.


திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் – மகாலட்சுமி தம்பதியினர் சென்னை கீழ்கட்டளையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பால ரக்க்ஷனா (வயது 14) மோசிகா (வயது 9) ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் பாலரக்க்ஷனா காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

​இந்நிலையில், இன்று காலை விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மேட்டு தெருவில் உள்ள ஸ்ரீனி என்ற தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இறந்த மாணவியின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

​இச்சம்பவம் குறித்து, காஞ்சி தாலுகா காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த மாணவியின் தந்தை டிவி பிரிட்ஜ் மிக்ஸி விற்கின்ற சத்தியா சோளம் கடையிலும் அவருடைய மனைவி தையல் வேலை செய்து கொண்டே தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி கிளை செயலாளராக உள்ள நிலையில் ,

மாணவிகளுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை உடற்கூறு பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டேன். என கூறி ஒரிக்கை பாரதிதாசன் மெட்ரிக் மேல் பள்ளி அருகே சாலையில் இறந்து போன மாணவியின் உறவினர்களுடன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு உதவியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் மன்றம் சாலை மறியலில் ஈடுபட்டு பள்ளி தாளரை கைது செய்யும் வரை ஓய மாட்டோம என ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காஞ்சிபுரம் உத்தரமேரூர் சாலையில் நடந்த மறியல் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவியின் உறவினர்களை தவிர மற்ற அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இறந்துபோன மாணவியின் தந்தை கார்த்திகை கூறும்போது, ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பாரதிதாசன் பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். இங்கே சில பிரச்சனைகள் உள்ளதாக அவ்வப்போது என் பிள்ளை என்னிடம் கூறினார். படிப்பு முக்கியம் என்பதற்காக நான் அதை எலலாம் உதாசீனப்படுத்திவிட்டு என் பிள்ளையிடம் நன்றாக படிம்மா என ஊக்கமளித்து வந்தேன்.

இந்நிலையில், இன்று காலை என்னுடைய மகள் ஆஸ்டலில் தூக்குமாட்டி இறந்துவிட்டார். என கூறினார்கள் இந்த பள்ளி மோசமான பள்ளியென இங்கு உள்ளவர்கள் தெரிவித்தார்கள் . என்னுடைய மனைவி தவக கட்சியில் மகளிர் அணியில் உள்ளார். என் மகளுக்கு நீதி கிடைக்காமல் உடற்கூறு பரிசோதனை செய்ய விடமாட்டேன் என கூறினார். மேலும், மகளின் சட்டத்தை திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதிக்கு எடுத்து செல்வதாக சோகத்துடன் தெரிவித்தார்.

செய்திகள் ; லட்சுமி காந்தன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed