கரூரில் கடந்த செப்.27 தேதியன்று நடைபெற்ற கூட்டத்திற்கு, தவெக தலைவர் ஜோசப் விஜயை நேரில் பார்க்க சென்று நெரிசலில் சிக்கி 41 பேர்கள் உயிர் இழந்தார்கள். அவர்கள் குடும்பத்திற்க்கு , ஜுலை.10 தேதியன்று தற்காலிக அரசு வேலைக் கொடுக்கப்பட்டது. மேலும், விஜயின் பிளக்ஸ் பேனர் திருச்சி முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேனர்கள் உச்சநீதிமன்றம் & உயர்நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்புகளுக்கு எதிராகவும் சட்டத்திற்க்கு புறம்பாகவும் வைக்கப்பட்டுள்ளது. அப்படி வைக்கப்பட்ட பேனர்கள் விழுந்து யாரவது இறந்தால் அவர்களில் வாரிசுகளுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும். “உயிரை மயிராக மதிப்போம்!” “அரசு வேலை கொடுப்பதை உயிராக நினைப்போம்”!.

திருச்சி நகர் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் கல்விக்கூடங்கள், பேருந்து நிறுத்தங்கள் என முக்கிய சாலை சந்திப்புகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூராகவும் அனுமதியின்றி தவெகவினரால் (TVK) பல்வேறு இடங்களில் பிரம்மாட பிளக்ஸ் பேனர்கள் வைக்கபட்டுள்ளது.

வாரிசு அரசியலை முற்றிலும் ஒழித்துவிட்டோம். ஆனால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை கொடுப்பதை லட்சியமாக வைத்துள்ளோம். எனவே கும்பகோணம் மகாமகம் குளத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகள் உடனே விண்ணப்பித்தால் கூட வேலைவாய்ப்பை வாரி இறைத்து விடுவார்கள் போல, படித்த பட்டதாரிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருந்தாலும் வேஸ்ட் நீங்கள் தயவுசெய்து முதியோர் உதவிதொகைக்கு தற்போதே விண்ணப்பிக்கவும் நிலையில் உள்ளது.

உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது என்ற கடுமையான உத்தரவுகளையும் மீறி பேனர் வைப்பவர்கள் , வைத்தவர்களை கண்காணிக்க தவறிய அதிகாரிகள் ஆகியோர் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற சட்டம் பிறப்பித்தால் தான் இது சரியாகும் போல, பேனர் வைத்தால் சட்ட நடவடிக்கை பாய்யும் என்ற பயத்தை ஏற்டுத்தினால் ஒழிய இதை சரி செய்ய முடியாது.

குறிப்பாக ஸ்ரீரங்கம் காவல் நிலையம் எதிரில், திருவானைக்காவல், மாம்பழச்சாலை, சத்திரம் பஸ் ஸ்டாண்டு சுற்றி, இதில் வேடிக்கை என்னவென்றால் அண்ணாசிலையில் பேருந்து நிறுத்தில், இங்கு பேனர்கள் முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது என்ற கடும் நெடுஞ்சாலைதுறை எச்சரிக்கை பதாகையை மறைத்து வைக்கப்பட்ட பேனரை படத்தில் காணலாம், மார்கெட் காவல் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் காவல்துறை அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

கட்டுரையாளர் / பாலாஜி, திருச்சி /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed