வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பள்ளிகொண்டா கீழச்சூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ். கபீர் அகமது, தனக்கும் தனது சகோதரர்களுக்கும் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பு வழங்கவும், நில அபகரிப்பு மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்து போலி பட்டா மோசடிகள் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், பள்ளிகொண்டா கீழச்சூர் கிராமத்தில் உள்ள தங்களது பூர்வீக நிலத்தை அபகரிக்கும் நோக்கில் சுகுமார், அவரது சகோதரர்கள் அசோக் குமார், மணவாளன் உள்ளிட்டோர் போலி பட்டா மற்றும் தாசில்தாரின் முத்திரைகள் போன்று போலி ரப்பர் முத்திரையை பயன்படுத்தி ஆவண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் மூலம் தங்களது நிலத்திற்கு உரிமை கோரி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் குறிப்பிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

மேலூம், சுகுமார் மீது ஏற்கனவே மூன்று எப்.ஐ.ஆர். வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இரண்டு வழக்குகளில் ஜாமீனில் உள்ள நிலையிலும் தொடர்ந்து மிரட்டல், அத்துமீறி நுழைதல், நில அபகரிப்பு முயற்சி, போலி ஆவணங்கள் பயன்படுத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி பட்டா தொடர்பாக, தாம் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்திருந்தாலும், அதில் தொடர்புடைய அனைவரின் மீதும் முழுமையான விசாரணை நடத்தி, போலி பட்டா தயாரித்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் பயன்படுத்தியவர்கள் மீது தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சில புகார்களுக்கு சி.எஸ்.ஆர். கூட வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனக்கும் தனது சகோதரர்களுக்கும் உடனடி காவல் பாதுகாப்பு வழங்குவதுடன், புகாரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த அறிக்கையை எழுத்துப்பூர்வமாக வழங்குமாறும் மாவட்ட நிர்வாகத்திடம் அவர் மனு மூலம் வலியுறுத்தியுள்ளார்.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed