மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து மற்றும் நெடுங்குளம் செல்லும் சாலையில் ஆளை விழுங்கும் பள்ளம் ஏற்பட்டுள்ளது சோழவந்தானிலிருந்து மதுரை மற்றும் திருமங்கலம் செக்கானூரணி செல்லக்கூடிய முக்கிய சாலையாக உள்ள இந்த சாலையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தச்சம் பத்து வில் இருந்து விவேகானந்தா கல்லூரி செல்லும் பாதையில் சாலையின் இடதுபுறம்
ஒரு ஆள் உள்ளே இறங்கி வெளியே வரக்கூடிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது சாலையிலிருந்து பார்ப்பதற்கு சிறிய பள்ளமாக தெரியும் இது அருகில் சென்று பார்த்தால் உள்ளே ஒரு ஆள் இறங்கி வெளியே வரக்கூடிய அளவில் உள்ளது.


வாகனங்களில் செல்பவர்கள் அதிகம் கவனிக்க முடியாத அளவு இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது சிறிது கவனம் சிதறினாலும் மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் சமயங்களில் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ஒதுங்கும் சமயங்களில் இந்த பள்ளத்தில் இறங்கி பெரும் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது மேலும் இரவு நேரங்களில் மதுரையில் இருந்து வருபவர்கள் கவனக்குறைவால் பள்ளத்தில் வாகனங்களை இறக்கி விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது கடந்த ஒரு வாரமாக இந்த பள்ளம் இருப்பதாக இந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள் நேற்று சிவப்பு கொடி கட்டிய எச்சரிக்கை கொடி கட்டிய பின்பும் பள்ளத்தை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் செல்கின்றனர் மேலும் சிவப்பு கொடி கீழே சாய்ந்தும் கிடைக்கிறது.


பெரும் உபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் பள்ளத்திற்குள் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பும் உள்ளது
மேலும் இதுபோக தச்சம்பத்துவில் இருந்து நெடுங்குளம் செல்லும் சாலையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது இதன் காரணமாகவும் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்த இரண்டு பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் மேலும் பருவமழை துவங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777
