திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி வட்டார நாட்டார்கள் உறவின்முறை சார்பில், காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள்.

இதை தொடர்ந்து காமராஜர் திருமண மண்டபத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு பேச்சுப்போட்டி திருக்குறள் கவிதைப் போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், நலத்திட்ட உதவிகளையும் சங்க நிர்வாகிகள் ஆறுமுக பாண்டியன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். மேலும், ஆயிரம் நபர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை கும்மிடிப்பூண்டி வட்டார நாட்டார்கள் உறவின் முறை சார்பில் நடத்தப்பட்டது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ; காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி நகரம் சார்பில் ; கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ; மாவட்ட செயலாளர் நேசக்குமார் ஆலோசனைப்படி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

செய்திகள் ; சுந்தர் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed