
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை மலை அடிவாரத்தில் உள்ள ராம் நகர் மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மாசானம். மதுரை மாவட்டம் எழுமலையில் வனத்துறை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆனந்தராமனேஸ்வரி (22) இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்த ஆனந்தராமனேஸ்வரி மகளுடன் மாயமானார். உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரில், வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தாயையும், மகளையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெரிய கருப்பன் என்பவரின் மனைவி வனப்பேச்சி(25) என்பவரும் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து மாயமானார். இதுகுறித்த இரு வேறு புகார்களின் அடிப்படையில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இரு பெண்களையும் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து பெண்கள் காணாமல் போவது அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
