முன்னாள் முதல்வர் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றி கழகம் சார்பில் ; சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா தலைமையில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் தியாகராஜன் தாமு கொரியர் கணேசன், ராஜேஷ் கண்ணா கேபிள் மணி கிரில் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா துரைக் கண்ணன் ஜெயபிரகாஷ் உமா மாரி அப்பாச்சி கண்ணன் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் துணைத்தலைவர் லதா கண்ணன் மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ் குருசாமி செல்வராணி சங்கங் கோட்டை ரவி சந்திரன் ராமநாதன் செங்குட்டுவன் மாரிமுத்து சௌந்தரபாண்டியன் மணிபாண்டி நூலகர் ஆறுமுகம் எஸ் எம் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் ; வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருவேடகம் சிபிஆர் மணி தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பேரூர் செயலாளர் முருகேசன் பேரூராட்சி முன்னாள் தலைவர் எம் கே முருகேசன் மாணவரணி மாவட்ட செயலாளர் சிவா பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் சேகர் ராமச்சந்திரன் பேரூர் துணைச்செயலாளர் தியாகு மருது சேது சரத் ஆறுமுகம் மன்னாடிமங்கலம் ராமு ஊத்துக்குளி சண்முகம் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் ; பேரூர் செயலாளர் திரவியம் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நிர்வாகிகள் ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த மரியாதை செய்த அனைவருக்கும் இந்து நாடார் உறவின்முறை சார்பில், நிர்வாகிகள் சோழவந்தான் சந்தோஷ் வழக்கறிஞர் அபிராமி மேலக்கால் மணிகண்டன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து சோழவந்தான் இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed