கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிமிர் என்ற தன்னார்வ குழு ஒன்று மிக சிறப்பாக மக்கள் நல பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுடைய பணிகளில் மிகவும் பாராட்டு கூறிய ஒரு செயல், கன்னியாகுமாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆதரவற்ற மற்றும் மனநலம் குன்றிய, பராமரிப்பு அற்ற மனிதர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடைகளை வழங்குவதுடன், மருத்துவ உதவிகளையும், முதல் உதவியாக செய்து, பின்னர் அருகில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் சேர்த்து இவர்களுடைய நேரடி கண்காணிப்பில் அவர்களுக்கு மருத்துவ வசதிகளும், பராமரிப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் அவர்களின் மனிதநேய வழிகாட்டுதலின்படி, மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிமிர் குழுவினர், நேற்று ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவருக்கு உரிய மருத்துவ உதவியை ஏற்பாடு செய்துள்ளனர்.

தக்கலை பகுதியில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தக்கலை பேருந்து நிலையத்தில் நடக்க முடியாமல் சுமார் 65 வயது முதியவர் ஒருவர் சாலை ஓரத்தில் இருந்ததை கவனித்த நிமிர் குழு, நாம் ஒருவர் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியுடன் முதியவரை மீட்டு தோவாளை பொற்றையடி அன்னை ஆசிரமத்தில் சேர்த்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், நிமிர் குழுவில் முன் நின்று சமூகப் பணிகளை செய்து வரக்கூடிய தோழர்களை அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777
