சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்மன்ற மாதாந்திர சாதாரண கூட்டமானது நகர்மன்றத் தலைவர், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையிலும் , துணைத்தலைவர் பாலசுந்தரம் , நகராட்சி ஆணையாளர் முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது திமுக நிர்வாகியும் 16 வது நகர்மன்ற உறுப்பினருமான காளீஸ்வரி அழகுசுந்தரம் பேசும் போது தனது வார்டுப்பகுதியில் ஒரு உயர்மின் கோபுர விளக்கு அமைத்திட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து, பேசிய சேர்மன் மாரியப்பன் கென்னடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியிலிருந்து கோபுர மின்விளக்கு அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறினார். இந்த கூட்டத்தின் போது திமுக நகர்மன்ற உறுப்பினர்களான மாவட்ட திமுக மகளிரணி , நகர்திமுக துணைச்செயலாளர் சண்முகப்ரியா , மாரிக்கண்ணன் , சோம. சதீஷ்குமார் , அழகர்சாமி , இந்துமதி திருமுருகன் , பாலாஜி , செல்வக்குமார் , சித்ரா , தேன்மொழி , சத்யா , நாகஜோதி , இராஜேஷ்வரி உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

செய்திகள் ; ஆனந்த் / சிவகங்கை / 8939476777
