தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் தவெக கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் தவெக கட்சி உறுப்பினர்களான ராஜா, கோவிந்தராஜ், சேட்டு, விக்னேஷ், யோவான் ஆகியோர் தலைமையில் தமிழக முதல்வரின் 52 வது பிறந்தநாள் விழா வெகு விமர்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் கலந்துக் கொண்டு தமிழக முதல்வரின் 52-வது பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 52 கிலோ எடை கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி அத்துடன் அன்னதானம் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவின் போது
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, நிர்வாகிகள் நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கழகத் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
