சுற்றுலா பயணிகள் பாதுகாப்போடு மீண்டும் படகு சவாரி துவங்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் கோதையாற்றில் கடையல் பேருராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி நடைபெற்று வந்தது இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்த படகு சவாரி நிறுத்தப்பட்டது இதனால் தற்போது படகு தளத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளதால் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் தமிழகம் கேரளா உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உல்லாச படகுகள் செயல்படாத காரணத்தால் இந்த பகுதி பொலிவிழந்து காணப்படுகிறது.

ஆகவே சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கிற்காக மீண்டும் பயணிகள் பாதுகாப்போடு படகு சவாரி துவங்க பேருராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
