முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகங்கள் அமைத்து பட்டு வஸ்திரங்கள் தானிய வகைகள் மூலிகை பொருட்கள் வாசனை திரவியங்கள் மலர் வகைகள் பழ வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, வேத மந்திரங்கள் முழுங்க கோபுர கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது. மேலும், புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதில், தமிழக மட்டுமல்லாது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி / 8939476777
