திருவள்ளூரில் மணல் கொள்ளையர்களுக்கு துணை போகும் திருத்தணி போலீஸ் ஆய்வாளர் சசிகுமாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன கூட்டத்தில், பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தமிழக அரசுக்கு கோரிக்கை…
கடந்த மே மாதம் 25 ம் தேதி, திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத் அவர்களுக்கு, திருத்தணி அருகே உள்ள தரணிவராகபுரம் கிராமத்தில் அரசின் அனுமதியை மீறி சவுடுமண் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் திருட்டுத்தனமாக கொண்டு செல்வது குறித்து பொதுமக்கள் தகவல் வழங்கி உள்ளனர்.

அது குறித்து செய்தி சேகரிப்பதற்காக வினோத்குமார் அந்த கிராமத்திற்கு சென்று, மணல் கொள்ளை நடைபெற்ற இடத்தையும், லாரிகள், டிராக்டர்கள் மூலம் செங்கல் சூளைக்கு சவுண்டு திருட்டுத்தனமாக கொண்டு செல்வதையும் படம் பிடித்துடன், மேலும், அது குறித்த தகவல்களை சேகரித்து கொண்டு வினோத்குமார் திரும்பி கொண்டிருக்கும் போது, இந்த தகவல் அறிந்து அந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த பொன்னுச்சாமி என்பவர், வினோத்தை வழியில் மடக்கி அவருடைய செல்போனை பறித்து தரையில் போட்டு அடித்து உடைத்து இருக்கிறார். பின்னர் வினோத்தையும் தாக்க முற்பட்டபோது, அங்கிருந்தவர்கள் மடக்கி வினோத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கிருந்து தப்பி வந்த வினோத், திருத்தணி காவல் நிலையத்திற்கு சென்று, அந்த மணல் கொள்ளை நடந்த இடத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட பொன்னுச்சாமி மூலம் தனக்கு நடந்த சம்பவத்தை புகார் அளித்துவிட்டு, வேலூர் சென்று அங்கு எனது உடைந்து போன செல்போனை பழுது பார்ப்பதற்கு கொடுத்துவிட்டு, வீட்டிற்கு திரும்பி வரும்போது, வினோத்தை போலீசார் வழியில் மடக்கி, கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து திருத்தணி பகுதியில் உள்ள மற்ற செய்தியாளர்கள் திருத்தணி காவல் நிலையத்தில் நேரடியாக சென்று விசாரித்த போது, வினோத் மணல் கொள்ளையில் ஈடுபட்ட பொன்னுச்சாமியின் மனைவியும், முருகப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியுமான குணசுந்தரி,
” தன்னிடம் செய்தியாளர் வினோத், சவுடு மண் எடுப்பதற்காக மாமுல் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால், வினோத் தன்னை கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்ததாகவும் ” போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் தான் அவரை நாங்கள் கைது செய்து இருக்கிறோம் ” என போலீசார் சொல்லி இருக்கிறார்கள்.

உடனே, அவர்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் சுபாஷ் அவர்களை தொடர்பு கொண்டு நடைபெற்ற சம்பவத்தை தெரிவித்துள்ளனர். உடனடியாக, அவரும் மற்ற மாநில நிர்வாகிகளும் திருத்தணி காவல் ஆய்வாளரை செல்போன் நம்பரிலும், காவல் நிலைய தொலைபேசியிலும், தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது ஆய்வாளரை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

உடனே, இது குறித்து போலீஸாரின் செயலைக் கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் அவர்கள் உடனடியாக ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், ,” வினோத்தை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் மறுநாள் திருத்தணியில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, அதிகாலையில் வினோத்தை போலீசார் மிரட்டி ஒரு கடிதத்தை எழுதி வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மறுநாளும் காவல் நிலையம் வரவழைத்து அன்று மாலை வரை காவல் நிலையத்தில் உட்கார வைத்து வினோத்தை விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.

மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் மறுநாள் மாலை வினோத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வினோத் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தனக்கு கொடுத்த தொல்லைகளை எல்லாம் எடுத்துரைத்தார். அதில், தன்னை நள்ளிரவில் ஆந்திர எல்லையில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அமர வைத்து வெகு நேரம் ஏதோ ஒரு தகவலுக்காக காத்திருந்தனர். அப்போது, ஒரு சமயத்தில் தனக்கு அதிக அளவில் தண்ணீர் தாகம் எடுத்ததனால், சிறிது தண்ணீர் கேட்டதற்கு ஒரு போலீஸ்காரர்,
“எனக்கு சிறுநீர் வருகிறது வேணுமா என கேட்டிருக்கிறார்.” அடுத்து வேறொரு போலீஸ்காரர் அவருடைய பூட்ஸ் காலால் மிதித்து இருக்கிறார். சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த வேனில் கதவை திறந்து குதித்து ஓடி விடுகிறாயா ” என கூறி இருக்கிறார்கள். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது, ” மின்சாதன பெட்டியில் போய் கை வைத்து செத்து விடு ” என கூறி கிண்டல் செய்து சிரித்திருக்கிறார்கள். மேலும், பல வகையில் வினோத்தை மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில், மனித மீறல் செயல்களை செய்து இருக்கிறார்கள்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில், பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் சுபாஷ் திருத்தணி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மண் கொள்ளையர்களுக்கு துணை இருந்து கொண்டு ஒரு பொய் வழக்கை வாங்கி, வினோத்தை இரண்டு நாட்கள் ஒரு தீவிரவாதியை போல் தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு துன்புறுத்தியது, முழுக்க, முழுக்க ஒரு மனித உரிமை மீறல் எனவும், ஆகவே, அந்த திருத்தணி காவல் ஆய்வாளர் சிவக்குமாரை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 8 ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்வது என அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தினர் மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமையில், திரண்டு கண்டன கூட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து,
“திருத்தணியில் செய்தியாளர் வினோத்தை மனசாட்சி இல்லாமல் ஒரு பொய் வழக்கை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து இரண்டு நாட்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்து துன்புறுத்திய திருத்தணி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடையே பேசிய மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் அவர்கள் கூறுகையில் ; தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை ; என்பதைப் போல யார் ஆட்சிக்கு வந்தாலும் செய்தியாளர்களை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் தாக்குவதும் போன்ற சம்பவங்களுக்கு மட்டும் பஞ்சம் இல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதைப்போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது திருத்தணியில் செய்தியாளர் வினோத் என்பவருக்கு திருத்தணி காவல் ஆய்வாளர் அவர்களால் நடத்தப்பட்ட இந்த கொடுமை சம்பவம், மனிதாபிமானம் இல்லாமல் ஒரு செய்தியாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்திய இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

எங்கள் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக தொடர்ந்து ஆட்சியாளர்களிடம் செய்தியாளர்களுக்கு பணி பாதுகாப்பையும் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்து கொடுக்கும் வகையில் அதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருக்கிறோம் அதை வலியுறுத்தி, எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பலமுறை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் செய்து இருக்கிறோம்.

நான் இதற்கு முந்திய ஆட்சியாளர்களும் அதை செய்யவில்லை ஆனால் தற்போது புதிதாக ஆட்சி வந்திருக்கும் ஆட்சியாளர்களிடமும் நாங்கள் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். தேவைப்பட்டால் இந்த கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் அதை இந்த மாதம் 20 மற்றும் 21 ம் தேதி மதுரையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறினார்.

திருத்தணியில் செய்தியாளரை தாக்கிய காவல்துறையினர், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது பத்திரிகையாளர்களுடைய கருத்தாக நிலவுகிறது.
எதிரொலி / 8939476777
