திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களிடம், பொன்னேரி ஆரணியாற்றின் கரையோரம் கள்ளுக்கடைமேடு பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தாங்கள் எந்த பிரச்சினையும் இன்றி நிரந்தரமாக குடியிருப்பதற்கு மாற்று இடம் கோரி கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.

அதன் அடிப்படையில், அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜே.கோவிந்தராஜன் அவர்கள் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்றிடம் பெற்றுத்தர வேண்டி, மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் வாயிலாக முயற்சிகளை மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில்,
அப்பகுதி மக்களுக்கு தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்வாய் கண்டிகை பகுதியில் வீட்டு மனை பட்டாக்கள் 51 நபர்களுக்கு பெற்று தந்தார். வீட்டு மனை பட்டாக்களை பெற்ற இருளர் முன்னேற்றச் சங்கத்தினர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, எஸ்.ரமேஷ், எஸ்.ராமஜெயம், எஸ்.உதயகுமார், கே.வி.நாகராஜ், இருளர் முன்னேற்ற சங்க செயலாளர் குணசேகரன், சங்கர், செல்வி, போண்டா சிவா, அருண்மொழி, விக்னேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed