திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி துவக்க விழா நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் சோழவரம் குறுவட்டத்தில் அடங்கிய ஆத்தூர், ஆட்டந் தாங்கல், அலமாதி, காந்திநகர்,சிறுணியம்,விளங்காடு பாக்கம்,காரனோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டா,பிறப்பு,இறப்பு,சான்றிதழ், நிலம் மற்றும் வீட்டுமனை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 101 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில், பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம்,வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார்,உதவி துணை வட்டாட்சியர் பாரதி,துணை வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
காரனோடையில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் முக்கிய கோரிக்கையாக வைத்தனர்.

செய்திகள் ; பழவை முத்து எதிரொலி / 8939476777
