திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரதாப், ஐ.ஏ.எஸ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.கவிதா ஐ.ஏ.எஸ் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்.
இவர், ஒரு மூத்த அரசு அதிகாரியாவார். அவர் மாநில குடிமைப் பணியில் (State Civil Service) இருந்து இந்திய ஆட்சி பணிக்கு (IAS) பதவி உயர்வு பெற்றவர் ஆவார். அவர் இதற்கு முன்பாக, ஆவின் இணை நிர்வாக இயக்குநராவும் (Joint Managing Director): திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் (ஆவின்) முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

அதற்கு முன்பாக, TTDC பொது மேலாளராக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திலும் (TTDC) சிறந்த முறையில் பணியாற்றியுள்ளார்.மே 30, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவின்படி, இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
செய்திகள் ; மாறன் / எதிரொலி / 8939476777
