திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டில் பழைய தாலுகா அலுவலக சாலை முதல் தெருவில் சுமார் 20க்கும் மேற்பட்ட அடுக்குமாடி மற்றும் சாதன வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு தெருவில் கேபிள் ஒயர்கள் அறுந்து தாழ்வாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளது. இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலையில் பட்டு நிலை தடுமாறி விழும் சூழ்நிலையில் நல்வாய்ப்பாக தப்பித்துள்ளனர்.

மேலும் பணிக்கு சென்று விட்டு திரும்பிய ஆண்கள் மற்றும் பெண்களின் தலை மற்றும் கழுத்தில் ஒயர்கள் இரவு நேரத்தில் மாட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, தெருவில் உள்ளவர்கள் கேபிள் ஆபரேட்டர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் கேபிள் ஆபரேட்டர்கள் இதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

மறுநாள் அதாவது நேற்று காலையில் இதனை சரி செய்வார்கள் என பொதுமக்கள் இருந்துள்ளனர். ஆனாலும் நேற்று மாலை ஆகியும் இதுவரை கேபிள் ஒயர் இருந்தபடியே தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதனை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed