மதுரையிலிருந்து விருதுநகர் மற்றும் ராஜபாளையம் வழியாக தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு காலை 10:00 மணிக்கு ஒரே ஒரு ரயில் மட்டும் இயக்கப்படும் நிலையில், அதன்பின் மதிய வேளைகளில் ரயில்கள் இல்லாததால் மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் மாலை நேர ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இதனால் மாலை நேர ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது. எனவே, மக்களின் இந்த பயணச்சுமையை குறைக்க மதுரையிலிருந்து தென்காசி மற்றும் செங்கோட்டைக்கு மதியம் அல்லது பிற்பகல் வேளையில் புதிய ரயில் சேவையைத் தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களுக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed