மத்திய அரசின் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலை தலையின் நடைபெறும் அச்சம்பத்து புறவழிச் சாலை திட்டம் 95 சதவீத பணியில் முடிந்த நிலையில் நாகமலை புதுக்கோட்டை மற்றும் விராட்டிபத்தை இரண்டு பகுதிகளிலும் 150 மீட்டர் தூரம் முடிக்கப்படாமலும் மலையின் வடிகால் பணிகள் கட்டப்படாமலும் உள்ளதால் பைபாஸ் சாலை திட்டம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது ஒப்பந்த காலம் வரும் செப்டம்பர் வரை செப்டம்பர் வரை இருப்பதால் தமிழக நெடுஞ்சாலை துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் பணிகளின் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கூகுள் மேப்பை பார்த்த கர்நாடகா பதிவு எண் கொண்ட எக்ஸ்யூவி கார் ஒன்று பெண் ஓட்டி வந்தார் பாதை இருக்கு என்று நினைத்து அச்சம்பத்து முதலாவது பேருந்து நிறுத்தம் மேட்டில் காரை ஏற்றும்பொழுது எதிர்பாராத விதமாக இருபுறமும் கார் நகர முடியாமல் நடுவில் நின்றது இதனால் இரு பரமும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த மேடு பாதையில் பயன்படுத்தி வந்தனர் இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சுமார் நூற்றுக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் சாலையில் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டது உடனடியாக அப்பகுதி உள்ள பொதுமக்கள் உதவியுடன் கர்நாடக பதிவேடு கொண்ட பெண் ஒட்டி வந்த காரை மீண்டும் பின்னோக்கி போராடி மீட்டெடுத்து நீங்கள் சுத்தி சொல்லுங்கள் என அறிவித்தனர் குடும்பத்துடன் வந்திருந்த பெண் ஓட்டி வந்த கார் பள்ளத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது விரைவாக பணிகளை முடித்து பொதுமக்களுக்கு பாதையை திறந்து விட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், பகுதி ஒன்று முழுவதாக மூடி விட வேண்டும் அல்லது உரிய பாதுகாப்பு வழிமுறையுடன் கடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாகவே உள்ளது.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed