கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, பாலேப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாதன குப்பம் கிராமத்தில் வசித்து வந்த அலமேலு 68 கணவர் பெயர் முனியப்பன்(late) விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்காக சென்ற மூதாட்டி அறுந்து கிடந்த மின்சார கம்பி மீது கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

அவருடைய உறவினர்கள் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து, உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கந்திகுப்பம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாதனகுப்பம் ஊர் பொதுமக்களிடம் இது குறித்து விசாரித்தபோது வரட்டனபள்ளி துணை மின் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான பராமரிப்பு செய்வதில்லை எனவும், அதிகாரிகள் பணிபுரியும் ஊழியர்களை கண்டு கொள்வதில்லை எனவும், வரட்டனப்பள்ளி துணை மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக உள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் எனவும் சரியாக பராமரிப்பு செய்யாத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த விபத்திற்கு முழு பொறுப்பையும் வரட்டனப்பள்ளி துணை மின் நிலைய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed