சோழவந்தான் அருகே தென்கரை பிரசித்தி பெற்ற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ திருமூலநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவில் நேற்று காலை திருக்கல்யாணம் வைபவம் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது கோயிலில் காலை 10 மணி அளவில் பிரியாவிடை ஸ்ரீ மூல நாதர் சுவாமி மற்றும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் திருவீதியில் எழுந்தருளினர் வழி நெடுக பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து அருள் பெற்றனர்.

பின்னர், சாமிகள் கோயிலில் அமைந்துள்ள திருமண மேடைக்கு எழுந்திருந்தனர் தென்கரை கிராம மக்கள் திருமண சீர்வரிசியை சுமந்து நாதஸ்வரம் மேளம் முழங்க ஊர்வலமாக வந்தனர் அங்கு சிவாச்சாரியார் கண்ணன் பரசுராமன் பட்டர் அர்ச்சகர்கள் செந்தில் ஹரிஷ் ஆகியோர் திருமண மேடையில் அமர்ந்துள்ள ஸ்ரீ பிரியாவிடைக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கும் ஸ்ரீ திருமூலநாத சுவாமி திருமாங்கல்ய கயிறு நாணல் சூட அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க சிவாச்சாரியார் கண்ணன் பரசுராமன் பட்டர் வேத பாராயணங்கள் முழங்க திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது தொடர்ந்து பெண்கள் அனைவருக்கும் திருமாங்கல்ய கயிறு சுவாமி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி தக்கார் மாலதி ஆய்வாளர் சாவித்திரி ஆலய பணியாளர்கள் மணிகண்டன் நாகராஜ் காவல் ஜனார்த்தனன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர் சுகாதாரம் குடிநீர் வசதிகளை தென்கரை ஊராட்சி மன்ற நிர்வாகம் செய்திருந்தது பாதுகாப்பு ஏற்பாடுகளை காடு பட்டி போலீசார் செய்திருந்தனர்
செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777
