மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2வது வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டிய
மன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா 19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.25மணிக்கு கொடியேற்றப்பட்டது.

இந்த கொடியேற்று விழாவையொட்டி மீனாட்சிசுந்தரேசுவர், கொடிமரம், நந்தீஸ்வரர், பலிபீடத்திற்கும் சிறப்பு அபிஷேக அலங்கார அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இந்தபூஜைகளை பட்டடர்கள் சர்வசாதகமாக குமரேசன்பட்டர் பிரதானஆச்சாரியர் ஜெய்கணேஷ், அலங்காரபட்டர் கணேசன், கோவில் அர்சகர்கள் கிருஷ்ணகுமார்; ஆகியோர் செய்தனர்.

தினந்தோறும் மாலை 6மணிக்கு மீனாட்சிஅம்மன் சிறப்பு அலங்காரங்கள் செய்யபட்டு முதல்நாள் சிம்மவாகனத்திலும், இரண்டாம்நாள் அன்னவாகனத்திலும், மூன்றாம் நாள் காமதேனு வாகனத்திலும், நான்காம்நாள் பட்டுப்பல்லக்கிலும், ஐந்தாம்நாள் குதிரைவாகனத்திலும், ஆறாம்நாள் ரிஷபவாகனத்திலும், ஏழாம்நாள் யாழிவாகனத்திலும் அருள்பாலிக்கிறார்.

26ந் தேதிஞாயிற்றுக்கிழமை மதியம் 3மணிக்கு தவத்திரு ஏடுராதாகிருஷ்ணன் மண்டகப்படியிலிருந்து செங்கோல், வைரகிரீடம், தங்ககவசம் ஆபரணப்பெட்டி புறப்பாடு, இரவு 7.25மணிமுதல் 7.50மணிவரை மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம், 27ந்தேதி திங்கள்கிழமை காலை 8மணிக்கு போடிநாயக்கன்பட்டி பாமா ருக்குமணி சமேத கோபாலகிருஷ்ணன் கோவிலில் இருந்து சீர்வரிசையுடன் உற்சவர் புறப்பாடு மற்றும் சந்தைபாலம் பாலதண்டாயுதபாணி கோவில்களில் இருந்து சீர்வரிசை புறப்பாடு நடக்கிறது.

அதேபோல் மாலை 6மணிக்கு தாதம்பட்டி இரட்டைவிநாயகர்
கோவிலிருந்து மேளதாளத்துடன் சுந்தரேசுவரை அழைத்துச்சென்று வல்லபகணபதிகோவிலில் மீனாட்சியம்மன் திக்விஜயம் நடக்கிறது. அதன்பின் சுந்தரேசுவர் மீனாட்சிஅம்மன் மாலை மாற்றுஉற்சவத்தை தொடர்ந்து 108முளைப்பாலிகை மற்றும் 108 சீர்வரிசைதட்டுடன் ஊர்வலமாக 2கிமீதூரம் நடந்துசென்று திருக்கோவிலை அடைகிறது. 28ந்தேதி செவ்வாய் கிழமை காலை 9மணி முதல் 10.30மணிக்குள் மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கல்யாணம் நடக்கிறது. 12மணிக்கு திருமாங்கல்யம் சரடு அன்னதானம் வழங்கப்படும்.

மாலை 6மணிக்கு பரதநாட்டியநிகழ்ச்சி நடக்கிறது. 29ந்தேதி புதன்கிழமை மாலை 6மணிக்குதேரோட்டம் நடக்கிறது. 30ந்தேதி வியாழக்கிழமை மாலை 6மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராமபொதுமக்கள் செய்து வருகின்றனர்.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed