கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது,

மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளும் நடைபெற்று வந்தது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹாகும்பாபிஷேக விழா இன்று மாபெரும் வேள்வி பூஜைகளுடன் துவங்கியது. யாக பூஜையின் போது புண்ணிய நதியில் இருந்து எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தினை மேள தாளங்கள் முழங்க சிவச்சாரியார்கள் எடுத்து சென்று கோபுர கலசத்திற்கு ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த
ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மனை, கிருஷ்ணகிரி கிழக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி, இரகு கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் இந்த விழாவில் டாக்டர் தகி, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா மற்றும் காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாரியப்பன், கவியரசு, ஜாவித் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழிபட்டனர்.

மேலும், இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் குப்புசாமி உள்ளிட்ட கோவில் கவுண்டர்கள் மற்றும் பூசாரிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்

செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed