கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 23.03.2026 ஆம் நாள் அன்று திங்கட்கிழமை செவிலியர் தொடர் கல்வி நிகழ்ச்சி Cotinuing Nursing Education (CNE) நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு செவிலியர் துறை சார்பாக தொடர் கல்வி நிகழ்ச்சி , போலுப்பள்ளி புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ஆறாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.க. சத்தியபாமா, தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்கள்.

செவிலியர்களுக்கான தொடர் கல்வி நிகழ்ச்சியில் (மெக்கானிக்கல் வெண்டிலேட்டர்) செயற்கை சுவாச கருவி கருவியில் மருத்துவ பயனாளிகளுக்காக மேம்படுத்தப்பட்டுள்ள செயல்பாடுகள் குறித்த கல்வி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அவசர சிகிச்சை தேவைப்படும் மருத்துவ பயனாளிகளுக்கு உடனடியாக செயற்கை சுவாச கருவியினை எவ்வாறு பொருத்தவும் பயன்படுத்த வேண்டும் என்பதையும், உயிர் காக்கும் நடவடிக்கையாக தொடர்ந்து மருத்துவ பயனாளரையும் செயற்கை சுவாச கருவியின் செயல்பாடுகளையும் எவ்வாறு கண்காணித்திட வேண்டும் என்பதையும் மருத்துவ பயனாளர்களுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனை தொடர்பான செயல்பாடுகளின் மாற்றங்களுக்கு ஏற்ப உடனடியான மருத்துவ சிகிச்சை எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்தும், விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த செவிலியர்களாக இருப்பினும் அவர்களுக்கு அவ்வப்போது மருத்துவத் துறையில் ஏற்படும் புதிது புதிதான மாற்றங்களுக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சை மற்றும் கருவிகளின் புதிய மாற்றங்கள் குறித்த ஆய்வுகளின் அறிக்கைகளின் படி தீவிர சிகிச்சை பிரிவு (ICU ) இடைநிலை சிகிச்சை தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவு(IMCU ) அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு (SICU)உயர் சார்பு பிரிவு(HDU) பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு(NICU) குழந்தைகள் தீவிர சிகிச்சைக்கான பிரிவு (PICU) அவசர சிகிச்சை பிரிவு(OT) அறுவை அரங்கங்கள் பிரிவு ஆகிய துறைகளில் அவசர சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகளைஇம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு செவிலியர் தொடர் கல்வி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

செவிலியர்களின் திறனும் மேம்பட வேண்டும் என்ற நோக்கிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர்களுக்கான செவிலியர் தொடர் கல்வி நிகழ்ச்சி நடத்துவது என்பது இதுவே முதல் முறையாகும்.

இத்தொடர்க் கல்வி நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் மரு. பி. சந்திரசேகரன், துணை முதல்வர் ஆர்.பி. சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு. செல்வராஜ், மரு. மது, மற்றும் உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர்கள் மரு ரோமுல் தயாள் ராஜா, மரு. தினேஷ் ஆகியோரும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை – 1 திருமதி மகாலட்சுமி, செவிலியர் கண்காணிப்பாளர் நிலை – 2 .திருமதி அனிதா மற்றும் திரு முத்து சாந்தி ஆகியோருடன் செவிலியர்கள் திருமதி எஸ் ஸ்ரீதேவி, செவிலியர் ஒருங்கிணைப்பாளர் (CNE), மற்றும் செவிலியர் ஜெம் மோசஸ், திருமதி.லட்சுமி ஆகியோருடன் 50 க்கும் மேற்பட்ட செவிலியர் குழுவினர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

செய்திகள் : மாருதி மனோ /கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed