திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12நாட்கள் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் 7ஆம் நாள் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற உள்ளது.


இக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ பெருவிழா இன்று தொண்டை மண்டல துளுவ வேளாளர் மரபினர் பொன்னேரி ,சின்னக்காவனம், பெரியகாவனம், கும்பமுனிமங்கலம் மற்றும் 18 கிராமத்தினர் ஏற்பாட்டில் காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக விநாயகர்,முருக பெருமானுக்கும் ஸ்ரீ லோகாம்பிகை தாயாருக்கும், ஸ்ரீ பாலீஸ்வரருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து மேளதாளம் முழங்க வேதமந்திரங்கள் ஓதியபடி சிவச்சார்யார்கள் கொடிப்பட்டத்தை கொடி மரத்தில் ஏற்றி வைத்தனர்.

இதையடுத்து, கொடிமரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தி மகாதீபாராதணை காட்டப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சிவபெருமானை தரிசித்து சென்றனர்.

இதில் பையூர் கேட்ட வேளாண் மரபு தலைவர் துரை முதலியார் மரபு செயலாளர் பூமிநாதன் முதலியார் மரபு ஆலோசகர் நாராயணன் முதலியார் மரபு பொருளார் இளங்கோவ முதலியார் மரபுத் துணைத் தலைவர் விநாயகம் முதலியார் மரபுத் துணை செயலாளர் சந்திர முதலியார் , சோமசுந்தரம் முதலியார், யோகேஷ் முதலியார் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன் , ஜெயம் ரமேஷ், தொழிலதிபர் ஜோதீஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்திகள் : லோகநாதன் / பொன்னேரி / எதிரொலி / 8939476777
