பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் கள ஆய்வு!
விவசாயிகள், நாம் தமிழர் கட்சி, தமிழர் மக்கள் இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்பு!
புனரமைப்பு வேலைகள் சரியாக நடைபெறுமா?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கடுமீட்டான்பட்டியில் உள்ள பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டு தூர்வாரி புனரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்து வந்தார்கள், அதன் விளைவாக தமிழ்நாடு அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2 கோடி 60 லட்சம் புனரமைப்பு செய்ய அறிவித்தார்.

வேலையை தொடங்கிவிட்டார்கள் ஒப்பந்ததாரர்கள். தகவல் பலகையை வைக்கக்கோரியும்,திட்ட மதிப்பீடு,வேலைத்திட்டம் சார்ந்த நகல்களை வழங்க கோரியும் விவசாயிகள்,நாம் தமிழர் கட்சி,தமிழர் மக்கள் இயக்கம், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் மேலூர் நீர்வளத்துறை அலுவலகத்திற்கு இன்று 17.03.2026 காலை 10.30 மணிக்கு சென்றோம்.
உதவி பொறியாளர் அவர்கள் இல்லை.
கண்காணிப்பாளர் அவர்களிடம் கேட்டதற்கு உதவி பொறியாளர் அவர்கள் பாலாறு அணைக்கட்டும் வேலையை பார்வையிட சென்றுள்ளதாக தகவல் கூறி அலைப்பேசியில் தொடர்பு கொண்டு எங்களிடம் கொடுத்தார்.

அவரிடம், பேசினோம் தகவல் பலகையை நாளை வைப்பதாகவும், அணையை உட்புறமாக தூர்வார நிதி ஒதுக்கவில்லை என்றும் அதை விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கி தூர்வார மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும்,வேலை நன்றாக நடைபெறும்,இரண்டு நாட்களில் திட்ட மதிப்பீடு, வேலை திட்டத்தின் நகலை வழங்குவதாக கூறினார்.
கண்காணிப்பாளர் அவர்களிடம் மனுவை அளித்தோம்.

பின்பு பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டிற்கு சென்று வேலையை கள ஆய்வு செய்தோம்.
வேலை திட்டத்திற்கான தகவல் பலகையை வைக்க வேண்டும்.
இதில் பெரியருவி நீர்த்தேக்கம் அணைக்கட்டில் உட்புறமாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
அணைக்கட்டின் மேற்பகுதியில் கற்கள் சரிந்து மேடாக காணப்படுகிறது அதை சரி செய்து தூர்வார வேண்டும்.
அணைக்கட்டில் இருக்கும் இரண்டாவது மதகுவை சரி செய்ய வேண்டும்.

வேலை சரியாக நடக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மக்களை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்படும். இதை கருத்தில் கொண்டு மேலூர் நீர்வளத்துறை உதவி பொறியாளர் அவர்கள் ,மேலூர் வட்டாடட்சியர் அவர்கள்,மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேலை நன்றாக நடைபெற கள ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்!!

செய்திகள் : காளமேகம் / மதுரை /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed