திருவெற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து, மீஞ்சூர் வரை 56E என்ற வழித்தடத்தில் ஒரு மாநகர பேருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அந்த பேருந்தின் வழித்தடத்தை அனுப்பம்பட்டு வரை நீடித்து வழங்க வேண்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த பேருந்து தற்போது 56 P என்று மாற்றம் செய்யப்பட்டு, அதே வழித்தடத்தில் இயங்கி வருகிறது. இதற்கிடையே அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விசிக கட்சியின் பி.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் நீலமேகம் மூலமாக, கோரிக்கை மனு கொடுத்ததை தொடர்ந்து, விசிக கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், 56 P வழித்தட பேருந்தை மீஞ்சூரில் இருந்து அனுப்பப்பட்டு வரை நீட்டித்து கொடுக்குமாறு. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

இந்த வழித்தட பேருந்தை அனுப்பம்பட்டு வரை நீடித்து கொடுப்பதால், அனுப்பம்பட்டு ஊராட்சி மட்டுமில்லாமல் அதை சுற்றி இருக்கக்கூடிய தேவதானம், காணியம்பாக்கம், சிறுவாக்கம், வன்னிப்பாக்கம், நாலூர் ஆகிய ஊராட்சி மக்களும் அதிகளவில் பயன் அடைவார்கள் என்பதை மேற்கோள் காட்டி விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் அவர்களுக்கு, பரிந்துரையில் கூறியிருந்தார்.


அதற்காக, மேற்குறிப்பிட்ட அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டத்தின் போது விசிக கட்சி தலைவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசிக கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வல்லூர் ரமேஷ் மூலமாக சென்னை மாநகர பேருந்து மேலாளர் பிரபு சங்கர் அவர்களையும் சந்தித்து பேசியிருந்தனர். அதன்படி, மீஞ்சூர் வரை இயக்கப்பட்ட 56 P வழித்தட பேருந்து, இன்றிலிருந்து அனுப்பம்பட்டு வரை நீடித்து இயக்கப்படுகிறது.


அதனை தொடர்ந்து, அனுப்பப்பட்டு மக்களும், விசிக கட்சி நிர்வாகிகளும், இந்த பேருந்து வழித்தடத்தை நீட்டித்து கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் விடுதலை சிறுத்தைகளின் கட்சித் தலைவர் அவர்களுக்கும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வல்லூர் ரமேஷ் அவர்களுக்கும், வி.சி.க கட்சியின் மாவட்ட செயலாளர் நீலமேகம் அவர்களுக்கும், ஒன்றிய செயலாளர் உமாபதி அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.


எதிரொலி / 8939476777
