விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருவண்ணாமலை ஊராட்சியில் அடங்கிய, இந்திரா நகர் பகுதியை அந்த ஊராட்சி நிர்வாகம் புறக்கணித்து எந்த விதமான பராமரிப்பு பணிகளையும் சரிவர செய்வது இல்லை என, அந்த ஊராட்சி மக்கள் குற்றசாட்டு கூறி வருகின்றனர்.
இந்திரா நகர் பகுதியில் முறையாக வாருகால் சுத்தம் செய்வது கிடையாது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுகிறது. குப்பைகள் சரிவர சுத்தம் செய்வது கிடையாது.
ஆங்காங்கே ஊரில் உள்ள பிரதான சாலைகளில் அனைத்திலும் குப்பைகள் கொட்டப்படுகிறது.
பஞ்சாயத்து நிர்வாகம் குப்பைகளை முறையாக அள்ளுவது கிடையாது.


இந்த பிரச்சினைகள் குறித்து பலமுறை ஊராட்சி செயல் அலுவலரிடம் புகார் செய்துள்ளோம். ஆனால், செய்து தருகிறேன் என்று மட்டும் கூறுகிறார். ஆனால், எந்த வேலையும் முறையாக செய்வது இல்லை, அடுத்தபடியாக வாருகால் சுத்தம் செய்வதற்கு நிரந்தரமான பணியாளர்கள் எங்களிடம் இல்லை என்று கூறுகிறார்கள்.
நாங்கள் காண்ட்ராக்ட்க்கு ஆட்களை தேர்வு செய்து வேலை செய்து கொடுக்கிறோம் என்று கூறுகிறார்கள்.


அந்த ஊரில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம், அதாவது மூன்று வயது முதல் ஐந்து வயது வரை படிக்கக்கூடிய அங்கன்வாடி மையத்தின் முன்பாக குப்பைகள் கொட்டப்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் பரவும் அபாயமும் உள்ளது. சுமார் 3,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழக்கூடிய இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளை சரிவர செய்து கொடுப்பதே கிடையாது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக வருவதில்லை, 30 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த தாமிரபரணி தண்ணீர் வருகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்திரா நகர் மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு செல்லும் மெயின் பாதையில் உள்ளது. இங்கு அரசாங்கத்தால் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை இருக்கிறது அந்த நிழற்குடை தனியார் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வாகனங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் நபர்களுக்கு நிழற்குடை எங்கே இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

இந்திரா நகரில் உள்ள அடிப்படை தேவையான 10 பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியை இடித்து விட்டனர். இந்த நீர்த்தேக்க தொட்டி இடித்து சுமார் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிறது
அதற்கு பதிலாக முப்பதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைத்து தருகிறோம் என்று கூறினர். ஆனால், இதுநாள் வரை அதற்கான எந்த முயற்சியிலும் ஊராட்சி நிர்வாகம் ஈடுபடவில்லை.
இந்திரா நகர் பகுதியில் நீண்ட காலமாக இருந்து வரும், வாருகால் பிரச்சினை சம்பந்தமாகவும், குப்பை அல்லாதது சம்பந்தமாகவும், உட்பட அனைத்து பிரச்சினைகளை குறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை,

இந்த ஊராட்சி நிர்வாகம் இந்திரா நகரை மட்டும் புறக்கணிப்பது ஏன்? இந்திரா நகரின் அடிப்படை உரிமைகள் மீட்கப்படுமா? என்பது இங்கு வாழும் மக்களின் நீண்ட கால கேள்வியாக இருந்து வருகிறது.
செய்திகள் : சிவராஜ் & சுந்தரராஜன் / எதிரொலி / 8939476777
