மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கல்லாங்காடு கிளைக் கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தலைவர் தொல் திருமாவளவன் ஆலோசனைப்படி கட்சி கொடி ஏற்றி பெயர் பலகை மற்றும் புனரமைக்கப்பட்ட முகாமினை சோழவந்தான் தொகுதி மாவட்ட செயலாளர் தமிழன் திறந்து வைத்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் பொறியாளர் தமிழ் வளவன் முன்னிலை வகித்தார் முகாம் செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். புணரமைக்கப்பட்ட முகாம் புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது குழந்தைகளின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில், நிர்வாகிகள் நல்லதம்பி ராமர் பாலமுருகன் பாஸ்கரன் அதிவீரபாண்டியன் ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் சோழவந்தான் சுரேந்திரன் ஆறுமுகம் இரணியன் பரிதி இளம்வழுதி முத்தையா திருமா வாசு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் : காளமேகம் / மதுரை எதிரொலி / 8939476778
