சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மையம் (டேன்கேம்) இணைந்து “டி.என்-இம்பாக்ட் 2026” மெகா தொழில்துறை ஹேக்கத்தான் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்கக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஹேக்கத்தான், ஒருங்கிணைந்த தொழில் கல்விசார் சவால்களைத் தீர்க்கும் திறன், புதுமைப்பணிகள் உருவாக்கம், மற்றும் படைப்பாற்றல் தொழில்நுட்பத்தில் திறன் முனைவோர் ஆகியவற்றை ஒரே கூரையில் கொண்ட நிகழ்வாக அமைந்தது. இந்த ஹேக்கத்தானில் தமிழ்நாட்டின் பல பொறியியல் கல்லூரிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் டிசைன் பொறியாளர்கள் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் தொழிற் உற்பத்தி மேம்பாடு, தானியக்க வடிவமைப்பு, நிலையான தொழில்நுட்ப தீர்வுகள், மற்றும் சுழற்சி பொருளாதாரம் போன்ற தலைப்புகளில் புதுமையான யோசனைகள் மற்றும் செயல்பாட்டு மாதிரிகளை முன்வைத்து தொழில்துறை சவால்களை வெற்றிகரமாக கையாண்டனர்.

சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ஆர். ஆர். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தொடக்கவிழாவில் பேராசிரியர் டாக்டர் டி. செந்தில் குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஃபூஜி எலக்ட்ரிக் இந்தியா நிறுவனத்தின் கற்றல் மற்றும் மேம்பாடு பிரிவு மூத்த மேலாளர் டாக்டர் திவ்யா ராமன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தொழில்துறை நோக்கில் வழிகாட்டும் முறை குறித்து உரையாற்றினார்.

டேன்கேம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ். எம். விஜயதீபன், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
செய்திகள் : தங்கதுரை /சேலம் எதிரொலி / 8939476777
