விபத்து மற்றும் சர்க்கரை நோயால் காலினை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் பொருத்தும் விழா சேலத்தில் நடைபெற்றது.

சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத் திறனாளர்கள் நலவாழ்வுச் சங்கம் மற்றும் சம்பந்தம் ஸ்பின்னிங் மில் ஆகியவை இணைந்து சென்னையில் உள்ள முக்தி நிறுவனம் மூலம் செயற்கை கால்களை தயார் செய்து அதனை பயனாளிகளுக்கு பொருத்தும் முகாம், சேலம் அம்மாப்பேட்டை எஸ்பிஎம்எம் மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 15ம் தேதி முதல் ஒருவார காலம் நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன் சங்க தலைவர் ருக்மணி தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக சேலம் வருவாய் கோட்டாட்சியர் உதயகுமார் கலந்துகொண்டு விழாவினை தொடங்கிவைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார். 
சிறப்பு விருந்தினராக ரோட்டரியன் சிவசுந்தரம், ரோட்டரி மாவட்ட ஆளுநர் மற்றும் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத் திறனாளர்கள் நலவாழ்வு சங்க தலைவர் டாக்டர் அத்தியண்ணா ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ்பிஎம்எம் மருத்துவமனை தலைமை நிர்வாகி மற்றும் ரோட்டரியன் தேவராஜன் செயற்கை கால்கள் வழங்கும் திட்டம் குறித்து விரிவாக பேசினார்.

இந்த முகாமில் சேலம், நாமக்கல், விழுப்புரம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற 120 பயனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கி பொருத்தப்பட்டது.

நிகழ்ச்சியின் முடிவில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் மிட்டவுன் சங்க செயலாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.

சேலம் செய்தியாளர்,
கா.தங்கதுரை /
9442979467 / எதிரொலி : 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed