நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார்
ஆலோசனையின் பேரில் ‘ வாசி’ என்ற வாசகத்துடன் அணிவகுப்பு!
திருநெல்வேலி மாநகராட்சியின் மைய அலுவலகம் எதிரே உள்ள வர்த்தக மையத்தில் நாளை 10 ம் தேதி, செவ்வாய்கிழமை ஒன்பதாவது பொருநை புத்தகத் திருவிழா தொடங்க உள்ளது.


இதனை தொடர்ந்து புத்தக திருவிழா நிகழ்ச்சி தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவக்குமார் ஆலோசனையின் பெயரில் பாளையங்கோட்டை குழந்தை இயேசு பெண்கள் பள்ளி மாணவிகள் “வாசி” என்ற வாசகத்துடன் அணிவகுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு குழந்தை இயேசு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி அற்புதா மேரி முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த ஆசிரியை இரா.சில்வியா வழிகாட்டுதலின் பேரில் பள்ளியின் ஆசிரியைகள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

நெல்லை செய்தியாளர் :
செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476777
