ஊழலை பற்றி பேசும் தகுதி விஜய்க்கு இல்லை, வரி ஏய்ப்பு செய்து நீதிமன்றத்தால் நிறுபனம் ஆகி உள்ள விஜய் தன் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகின்றார் என்பதை வெளிப்படையாக கூறுவாரா.? மக்களால் நேசிக்கக் கூடிய எங்கள் முதல்வரை யார் விமரித்தாலும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம், வேளாண் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேட்டி.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கும் தீவிர சிகிச்சை பிரிவு புதிய மருத்துவ கட்டிடத்திற்கும் இணைப்பு உயர்மட்ட பாலமாக ரூபாய் நாலு கோடி மதிப்பீட்டில் லிப்ட் வசதியுடன் கூடிய புதிய நடைபாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை மேற்கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை அமைச்சர் வரியை ஏய்ப்பு செய்யும் விதத்தில் சம்பளத்தை மறைத்த குற்றச்சாட்டுக்காக தற்போது நீதிமன்றத்தால் அபராத தண்டனைக்கு ஆளாகியுள்ள விஜய் ஊழலை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர்.

ஏற்கனவே வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்தவர். முளைத்து மூன்று இலை வருவதற்குள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். விஜய் – இவர்கள் நாட்டை ஆண்டால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக அறிவிக்க விஜய்க்கு துணிச்சல் திராணி இருக்கிறதா என கேள்வி எழுப்பிய அமைச்சர் எங்கள் மக்கள் முதல்வரை யார் தாக்கி பேசினாலும் நாங்கள் கடுமையாக விமர்சனம் செய்வோம் என்றார்.

பிறரை குறை கூறி தன்னைத்தானே தூய சக்தி என்று கூறி கொண்டவர் தற்போது ஊழல் செய்துள்ளார் என்பது நீதிமன்றத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தவறு செய்பவர்கள், செய்தவர்கள் அனைவருமே விஜயுடன் உள்ளார்கள். இவர்கள் நாட்டை ஆண்டால் என்ன நடக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூர் செய்தியாளர் : எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed