கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான சென் ஜோசப் கல்லூரியில் Multi Disciplinary Research Approach என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மணிமொழி தியோடர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், 2021 முதல் ஏப்ரல் 22 வரை டிஆர்டிஓ (DRDO)வில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்தார்.

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்காக டிஆர்டிஓ மூலம் வழங்கப்படும் முக்கிய தொழில்நுட்ப வசதிகள் குறித்து விளக்கினார். குறிப்பாக, விண்வெளி வீரர்களுக்கான Life Support System, Astronaut Medical Monitoring System, Life Raft Life Support System, Radiology Monitor மற்றும் Medical Medicine Kit ஆகியவை டிஆர்டிஓவின் பங்களிப்பாக இருப்பதை எடுத்துரைத்தார்.

ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்கள் (Gaganyauts) பூமியின் சுற்றுப்பாதையில் செயல்படும் போது அவர்களின் உடல்நிலை கண்காணிப்பு மிக முக்கியமானது என்றும், அதற்கான மருத்துவ தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உருவாக்கப்படுவது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், டிஆர்டிஓவில் உள்ள 52 ஆய்வகங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கான தகவல்களை DRDO-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.drdo.org�-இல் காணலாம் என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள் Interdisciplinary Research Outlook வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் (stipend) பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

அறிவியல் வளர்ச்சியின் அடிப்படை கேள்வி எழுப்புவதில்தான் தொடங்குகிறது என்றும், பிரச்சினைகளுக்கு உடனடி பதிலை ஆசிரியர்களிடம் கேட்பதை விட, தங்களுக்குள் இருந்து தீர்வை கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கருத்தரங்கு மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், பன்முக ஆய்வு அணுகுமுறையையும் வளர்க்கும் வகையில் அமைந்தது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் : எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed