தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்ட பயன்கள், 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டப் பயன்கள் பயனாளிகளுக்கு வழங்கி “என் கனவு என் எதிர்காலம்” இணைய தளத்தின் சேவையை துவக்கி வைத்தார்.

இதனையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், எம்.ஜி.மஹாலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் பங்கேற்று வருவாய் , பேரிடர் மேலாண்மைத்துறை (சமூக பாதுகாப்புத்திட்டம்) மூலம் 2,051 பயனாளிகளுக்கு ரூ.27,49,800/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறை மூலம் 35 பயனாளிகளுக்கு ரூ.29,40,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 57 பயனாளிகளுக்கு ரூ.53,60,073/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,151 பயனாளிகளுக்கு ரூ.1,10,49,873/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.கார்மேகம் , ராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் , மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி , செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர் : எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed