கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ஜெயஸ்ரீ நமது நாட்டின் 77வது குடியரசு தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றினார். டி.எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த குடியரசு தின விழாவில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு, காவல் துறையினர் மத்தியில் பேசிய டிஎஸ்பி ஜெயஸ்ரீ இந்திய ஜனநாயக நாட்டில் மக்களை காப்பதில் சட்டம் ஒழுங்கை பேணி பராமரிப்பதில் காவல் துறையினருக்கு பெரும்பங்கு உள்ளது என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டுமென்றவர்,

சட்டத்தை மதித்து மக்களை காப்பதும் இந்தியா ஜனநாயக நாடு என்பதை உறுதி செய்யும் என்றார். இந்த நிகழ்வில் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன், கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் ரவி, தனசாமி, வரதராஜன் , தலைமை காவலர் ராஜன், வைரமுத்து, மற்றும் போலீசார் பங்கேற்றனர் .

கும்மிடிப்பூண்டி செய்தியாளர் : ஜான் பிரான்சிஸ்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed