திருமுக்குளத்தை செப்பனிடுவது எப்போது ? தொன்மையும், புகழும் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ நாச்சியார் (ஆண்டாள்) கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
இது தான், பாவை பாடிய ஆண்டாள் நீராடிய குளமா என்று இங்கு வரும் வெளியூர் பக்தர்கள் கேட்கும் அளவுக்கு இதன் நிலைமை சொல்லில் எழுத முடியாத அளவுக்கு உள்ளது. இங்கு குளிப்பவர்கள் விட்டுச்செல்லும் பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்கிறது. இறந்தவர்களுக்கு நீத்தார் கடன்களைச் செய்வோர், இறந்தோரின் துணிமணிகள், மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை குளத்தில் போட்டு விடுகின்றனர்.


இங்கு சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் குப்பைகளை இங்கு தான் கொட்டுகிறார்கள். குளத்தின் படிக்கட்டுகள் மிக மோசமாகச் சிதிலமடைந்துள்ளது. தற்போது நிலவும் கடும் வெப்பத்தில், குளத்தின் தண்ணீர் வற்றிக் கொண்டிருப்பதால், குளத்தின் படிக்கட்டுகளைச் செப்பனிட்டுச் சரி செய்ய இதுவே சரியான தருணம்.
அத்துடன், குளத்தைப் பாதுகாக்கும் முகமாக, அதன் சுற்றுப்புறங்களில் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்று இங்கு வாழும் ஆண்டாள் பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


செய்திகள் ; சுந்தர்ராஜன் எதிரொலி / 8939476777
