போதைக்கு ‘நோ’, விளையாட்டுக்கு ‘யெஸ்’: கன்னியாகுமரி காவல் துறையின் கிரிக்கெட் தொடர் நிறைவு

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட அளவிலான காவல்துறை–பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்தத் தொடர், ஜூலை 1, 2026 அன்று தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 28 அணிகள் 20 ஓவர் லெதர் பால் முறையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றன. போட்டியின் நிறைவில் சிறப்பாக விளையாடிய அணிகளுக்கு பரிசுத் தொகைகளும் வழங்கப்பட்டன.

இறுதிப் போட்டி முடிவில் Shine Cricket Club முதல் இடத்தையும், Packar Sunny Club இரண்டாம் இடத்தையும், DPM Super Kings மூன்றாம் இடத்தையும், Kings Cricket Club நான்காம் இடத்தையும் பெற்றன. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.30,000 மற்றும் ரூ.15,000 பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிநடத்துவதும், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக காவல்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை சமூகப் பங்களிப்புடன் இணைக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் தொடர், மாவட்ட மக்களிடமும் இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகள் ; சுரேஷ் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed