கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆன சபரி வர்மன்(34) என்பவர் புகையிலை பொருள் விற்பனை செய்ததாக கூறி கைது செய்யப்ட்டு நாகர்கோவில் கிளை சிறை சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் 13.07.2026 அன்று காலையில் மர்மமான முறையில் சபரி வர்மன் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்து ,உயிரிழந்த காரணம் தெரியும் வரை உடலை வாங்குவது இல்லை என கூறி போராட்டம் நடத்தினர்.
மருத்துவக்கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் ஆசாரிபள்ளம் – நாகர்கோவில் சாலை ஸ்தம்பித்தது. இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து அவர் உறவினர்களை அழைத்துச் சென்று சபரி வர்மனின் உடலை பார்வையிட ஏற்பாடு செய்தார். சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை படி காயங்கள் இருந்தால் அந்த காயங்கள் எந்த அடிப்படையில் ஏற்பட்டது.

அவரது மரணத்திற்கு வேறு காரணம் இருந்தால் அது குறித்து வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை அடுத்து அங்கு ஏற்பட்ட பரபரப்பு ஓரளவு முடிவுக்கு வந்தது.
செய்திகள் ; சுரேஸ் / எதிரொலி / 8939476777
