முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர், ஒரிசா மாநில முன்னாள் ஆளுனருமான, பி எஸ் குமாரசாமி ராஜா 128 வது பிறந்த தின விழா ராஜபாளையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 4 கோட்டை ராஜுக்கள் சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் வாகனங்களில் சென்று திருவனந்தபுரம் தெரு, ஜவகர் மைதானம், காந்தி சிலை ரவுண்டானா, நகராட்சி அலுவலகம் போன்ற பகுதிகளில் உள்ள பி.எஸ்.குமாரசாமி ராஜா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிங்கராஜா கோட்டை சமூக தலைவர் கே.பி. ராம்சிங் தலைமையில் திருவனந்தபுரம் தெரு, சக்கராஜா கோட்டை தெரு, பழையபாளையம் ராஜுக்கள் சமுதாயம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். மேலும் ஊர்க்காவல் படை தென்பிராந்திய தளபதி பி.ஜே. ராம்குமார் ராஜா,
பி.எஸ்.குமாரசாமி ராஜா பேரன் ராதாகிருஷ்ண ராஜா, தமிழக விவசாய சங்கம் சார்பில் என்.ஏ. ராமச்சந்திர ராஜா, தென்னை விவசாயிகள் சங்கம் வி.கே.பீமராஜா, அக்ரி டி. சுப்பிரமணியன் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டு சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

செய்திகள் ; ராமகிருஷ்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *