அரசுப் பள்ளிக்கு இடம் வழங்கி, 25 ஆண்டுகளாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதும் மற்றும் கழிப்பிடம் அமைத்துத் தர தொழிலதிபர் கோபி உறுதி…

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாவிதம்பட்டியைச் சேர்ந்த தீர்த்தகிரி ஜெயபார்வதி தம்பதியரின் மகன் தொழிலதிபர் கோபி நாகவேணி, அவரது குடும்பத்தினரான தம்பி பாலாஜி தீபா, தங்கை யமுனாதேவி தீனதயாளன், ப்ரீத்தி, தீப்தி, ரோஷன் உள்ளிட்ட குடும்பத்தாரின் WOOD TACH நிறுவனம் மற்றும் ஜெயம் அறக்கட்டளை மூலம் கடந்த 25 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை பள்ளி மாணவ மாணவிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு கல்வி மற்றும் சமூக நல உதவிகளை வழங்கி வருகிறார்.

இதனை தொடர்ந்து தொழிலதிபர் கோபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பொன்னாடைகள் போர்த்தி மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது நாவிதம்பட்டி அடகு கடை உரிமையாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான சிவசங்கர் உடனிருந்தனர். இதன் தொடர்ச்சியாக, நாவிதம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியை அரசு விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு பள்ளியை தத்தெடுத்துக் கொள்வதாக அறிவித்தார், இவர் பள்ளிக்கான இடத்தை வழங்கியதுடன், மாணவர்களின் பயன்பாட்டிற்காக பெஞ்ச், டேபிள், மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்து அடிப்படை கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளார் குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நல உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

மேலும், அப்பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக கடந்த 25 ஆண்டுகளாக இலவச நோட்டுப் புத்தகங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக தெரிவித்தார். மேலும் மேல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை நேரில் பார்வையிட்ட கோபி, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை இலவசமாக வழங்குவதாக உறுதியளித்து, அப்பள்ளிக்கு பள்ளியில் கணினி வசதி இல்லாததை அறிந்த அவர், புதிய கணினி ஒன்றை வழங்குவதுடன், பள்ளியின் ஒரு கட்டிடத்திற்கு வண்ணம் பூசித் தரவும் முன்வந்துள்ளர்.

பின்னர் அழிஞ்சிக்குப்பம் கிராம அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து பள்ளிக்குத் தாணாக முன்வந்து தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து. அப்போது, பள்ளியில் பயிலும் 485 மாணவிகளுக்குப் போதிய கழிப்பிட வசதி இல்லாததால் புதிய கழிப்பிடக் கட்டிடம் அமைத்துத் தருமாறு தலைமை ஆசிரியர் கோரிக்கை விடுத்தார். இதனை உடனடியாக கட்டித் தருவதாக ஏற்றுக்கொண்ட கோபி, தனது சொந்த செலவில் புதிய கழிப்பிடக் கட்டிடத்தை அமைத்துத் தருவதாக உறுதியளித்தார். மேலும், பள்ளிக்குத் தேவையான பிற கல்வி உபகரணங்களையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களையும் தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்தார்.

தொழிலதிபர் கோபியின் இந்த கல்வி மற்றும் சமூகப் பணிகளை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பாராட்டி வருகின்றனர்.

செய்திகள் ; மூர்த்தி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *