திருவள்ளூர் மாவட்டம் திருவூர் சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆண்டு விழா திருவூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது , தென் இந்திய அளவிலும் மாநில அளவிலும் 30 தங்கம் , 23 வெள்ளி , 22 வெண்கலம் என 75 பதக்கங்களை வென்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா , 1 ஆம் ஆண்டு கச்சை பட்டயம் கட்டும் விழா மிக சிறப்பாக நடைப்பெற்றது முன்னதாக விழாவை ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் முனைவர் .க.சரவணன் தேசிய கொடியைறேற்றி தொடங்கிவைத்தார் சூப்பர் கிங்ஸ் பயிற்சி பள்ளியின் கொடியை ஞா.பால்ராஜ் ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார் , வரவேற்புரை திருவூர் சூப்பர் கிங்ஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறவனர் சுந்தர் என்கிற துரைராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்,

பயிற்சியாளர்கள் ராஜா, ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர் , அனைவரையும் வரவேற்றார் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு செவ்வாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.விஜயகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் மேலும் கச்சை கட்டு பட்டயத்தை த.வெ.க ஒன்றிய செயலாளர் எஸ்.விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.பழனி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.திலீப்ராஜ், வழக்கறிஞர்கள் க.எட்வின் , ஆர்.அன்பு,, முனுசாமி, சமூக ஆர்வலர்கள் சுபாஷ், தாமோதிரன், சா.அமுதன், சு.ரவி, ரா.உதயகுமார், ஜோதி, ஹரி, விஜய் ஆனந்த், அன்பு, சந்தானம், வெங்கடேசன், செந்தில்குமார், செல்வராஜ், மூர்த்தி, ஜெகநாதன், பிரான்சிஸ், வெற்றி, சாம்சன், குணா, ரவீந்திரன், செந்தில்,, தமிழ்குமார், உள்ளிட்டோர் அனைத்து பயிற்சி மாணவர்களுக்கும் சான்று மற்றும் கட்டு பட்டயத்தை வழங்கி சிறப்பித்தனர்.

இதில் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கல்ந்துக் கொண்டு சிறப்பித்தனர் முடிவில் துணை பயிற்சியாளர் து.லோகரட்சகி நன்றி கூறினார்.
செய்திகள் ; லெனின் லோகேஷ் / எதிரொலி / 8939476777
