தமிழக அரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மத்திய கூட்டறவு வங்கியின் கிளைகளை ஆய்வு கொள்ள 3பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் முத்தியால்பேட்டை மத்திய கூட்டறவு வங்கி கிளைக்கு தள்ளாடி சென்று வளாகத்திலேயே போதையில் அலப்பறையில் ஈடுபட்ட உதவி மேலாளர் முரளி
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மது போதையில் பணியின்போது அலப்பறையில் ஈடுபட்ட உதவி மேலாளரை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு காரில் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.


மருத்துவமனையிலேயே தரையில் படுத்து அலப்பறையில் ஈடுபட்டு ஆபாச வார்த்தைகளால் பேசி நோயாளிகளுக்கு இடையூறு ;
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் செவிலிமேடு கிளை உதவி மேலாளர் இருந்து வருபவர் முரளி.அண்மையில் தமிழக அரசு விவசாயிகளுக்கான பயிர் கடனை தள்ளுபடி குறித்தான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் காஞ்சிபுரம் மத்திய கூட்டறவு வங்கியின் 52வங்கி கிளைகள் மூலம் அதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.



இதற்கென மூன்று பேர் கொண்ட ஆய்வு குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது. இதில் முரளி என்பவரும் ஒருவராக இருந்துவரும் நிலையில் இன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு ஆய்வு முரளி மது போதையில் தள்ளாடியபடி சென்று வங்கி கிளையின் வாயிலேயே படுத்து அலப்பறையில் ஈடுபட்டுள்ளார்.



இது குறித்து மத்திய கூட்டுறவு வங்கியின் இணை இயக்குநருக்கு தகவல் செல்ல உடனடியாக அரசு காரில் முரளி ஏற்றி அழைத்து செல்லப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் ஆபாச வார்த்தைகளால் பேசியபடி மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முயன்ற நிலையில் மருத்துவமனையிலேயே தரையில் படுத்து அலப்பறையில் ஈடுபட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிகள் அவதிகளுக்கு உள்ளாகினர்.

செய்திகள் ; லட்சுமி காந்தன் எதிரொலி / 8939476777
