விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை ,புலி ,மான் , மிளா , காட்டெருமை , காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிவாரத்தை நோக்கி இறங்குவது வழக்கம். இந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே கோவிலாறு மருதம்பாறை என்ற வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று யானையை ஆய்வு செய்தனர்.

அப்போது 50 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்றும் தண்ணீருக்காக வரும் பொழுது பாறையில் சிக்கி தவறி விழுந்து யானை உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், யானை இறப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் ; கண்ணன் / எதிரொலி / 8939476777
