இருதய சிகிச்சை அளிக்கும் நிபுணரை கேஷுவாலிட்டி டூட்டி பார்க்க வைப்பதால், சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களுடன் இருதய சிகிச்சை பிரிவு மீண்டும் 30 நாட்களாக பூட்டிக்கிடக்கின்ற கேவலம்.
கர்ப்பிணி பெண்களின் இருதய பிரச்சனைகளை கண்டறிய எடுக்கப்படும் எக்கோ டெஸ்ட் கைவிடப்பட்டதால், கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அவதி.

ஏற்கனவே திமுக ஆட்சியில் ஒரு வருடமாக பூட்டப்பட்டிருந்த கேத் லேப் எனப்படும் இருதய சிகிச்சை பிரிவால் சுமார் 40 க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு செல்கின்ற வழியில் மாரடைப்பால் மரணம் ஏற்பட்டிருந்தும் , “தவெக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு மருத்துவர் கேஜே.அருண் ராஜ் கண்டுகொள்ளவில்லையே என தமிழக வெற்றி கழக கட்சியினரே புலம்புகின்றனர்.
அரசு தலைமை மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப் படாததால் மருத்துவமனை சுற்றிலும்”பல மல்டி ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள் துவங்கி வீறுநடை போடுகின்றது. டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கமிஷனுக்காக புரோக்கர்களாக செயல்பட்டு நோயாளிகளை பிரைவேட் மருத்துவமனைக்கு அனுப்பி ஆயிரம் கணக்கில் பணத்தை கொள்ளையடிக்கின்ற அநியாயம் .


காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 1,000 க்கும் மேற்பட்ட உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் , தொற்றா நோய் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை பிரிவு, இருதய பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல சிகிச்சை பிரிவு, பெண்கள் மருத்துவப் பிரிவு , ஆண்கள் மருத்துவ பிரிவு, குழந்தைகள் மருத்துவ பிரிவு, பல் மருத்துவ பிரிவு, டயாலிஸில் பிரிவு, இயன்முறை மருத்துவப் பிரிவு, கண்பிரிவு, என 32 பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.
765 படுக்கைகள் மற்றும் 32 பிரிவுகள் உள்ள இந்த மருத்துவமனையில் மதியம் , இரவு ஷிப்ட்டுக்கு 25 செவிலியர்கள் மட்டுமே பணி செய்வதால் அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. இவ்வளவு பெரிய மருத்துவமனையில் , CARDIOLOGY விரைவில் ஒரே ஒரு டாக்டர் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரு டெக்னீசியன் கூட நியமிக்கப்படவில்லை. ஆஞ்சியோ செய்த இரண்டு பேர் மறுநாளே இறந்துவிட்ட கொடுமையும் அரங்கேறி உள்ளது.


SURGEON, PHYSICIAN போன்ற பொது மருத்துவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது மருத்துவ நலப் பணிகள் அமைச்சர் கேஜி.அருண் ராஜ் அவருக்கு தெரியுமா என்பது கூட தெரியவில்லை. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் இருந்த திமுக அரசு மீது நோயாளிகள் கடும் கொந்தளிப்பில் இருந்ததைபோல, அதி முக்கியத்துவம் வாய்ந்த இருதயவியல் சிகிச்சை பிரிவு மீண்டும் 30 நாட்களாக பூட்டியே கிடப்பதால், தவெக ஆட்சியில் இருதயவியல் சிகிச்சை பிரிவுக்கு மூடு விழா கண்டுவிட்டார்களா என நோயாளிகள் புலம்புகின்றனர்.
இந்த அவல நிலையை மாவட்ட நிர்வாகமும் , மருத்துவமனை நிர்வாகமும், தமிழக அரசும் உண்டாக்கி விட்டது என நோயாளிகள் கொந்தளிக்கின்றனர். மேலும் மகப்பேறு நல சிகிச்சை பிரிவிற்க்கு வருகின்ற கர்ப்பிணி பெண்களுக்கு இருதயம் சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் “எக்கோ ” சிகிச்சையும் பெற முடியாததால், அங்கும் இங்கும் அலைகின்ற கர்ப்பிணி பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன.

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற வியாதிகள் நிறைய நபர்களை பாதிக்கின்றது. கார்டியாக் பிரிவில் 30 நாட்களாக இருதய நோய் டெக்னீசியன்கள் நியமிக்காததால், இருதயங்களில் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுபிடிப்பதற்கும், நீக்குவதற்கும் ஆஞ்சியோகிராம் / பிளாஸ்ட் சிகிச்சை பெற முடியாமல் இருதய சிகிச்சை நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வந்து ஏமார்ந்து தனியார் மருத்துவமனைக்குச் சென்று லட்சக் கணக்கில் செலவு செய்து மன உளைச்சலுக்கு ஆளாகுகின்ற நிலையும் அதிகரித்துள்ளது.

செய்திகள் ; லக்ஷ்மி கந்தன் / எதிரொலி / 8939476777
