சேலம் முக்கிய பகுதியில் அமைந்துள்ள கோகுலநாத இந்து மகாஜன மேல்நிலைப் பள்ளியின் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பேரணியை பள்ளியின் செயலாளர் ம.ரகுநாதன், தலைமை ஆசிரியர் வெ.நஞ்சையா, பொறுப்பு தலைமை ஆசிரியர் க.விஜயபாபு மற்றும் நிர்வாக அலுவலர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியில் மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.
இப்பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் செய்திருந்தார். இருபால் ஆசிரியர்களும் பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பேரணி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

சேலம் செய்தியாளர்
கா. தங்கதுரை 9442979467.
