குடியாத்தம் செட்டிகுப்பம் ப்ளூ ஸ்டார் கபடி குழு நடத்தும் 66 ஆம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. முதல் பரிசு 30 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாம் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாம் பரிசு ரூபாய் 15,000 மற்றும் கோப்பை, நான்காம் பரிசு ரூபாய் 10,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

இந்த போட்டியை மாவட்ட அமைச்சர் கபடி கழக சேர்மன் சீவுர்சேட்டு மாவட்ட துணைத் தலைவர்கள் இராசி. தலித் குமார் செ.கு. வெங்கடேசன் பிரபாகரன் ஆறுமுக தாஸ் சர்வதேச நடுவர் கோபாலன் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் தலைசிறந்த 45 அணிகள் போட்டியிட்டன.

இந்த போட்டி பகல்-நிலவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்றது. இந்த போட்டியின் நடுவர்களாக சிவராமன் பாஸ்கர் மோகன் ராஜேஷ் பணியாற்றினர். முதல் பரிசுSRN ப்ளூ ஸ்டார் அணியும், இரண்டாம் பரிசுVRI கோவை அணியும், மூன்றாவது பரிசு PK ஸ்போர்ட்ஸ் ஜோலார்பேட்டை அணியும், நான்காம் பரிசு BLUESTAR செட்டிகுப்பம் அணியும் பெற்றன.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை சதீஷ் மற்றும் ப்ளூ ஸ்டார் கபடி குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வேலூர் செய்தியாளர் ; மூர்த்தி எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed